கொளுத்தும் வெயில் : 3வது நாளாக சதமடித்த ஈரோடு!

Published On:

| By christopher

Erode hit a 100 Fahrenheit

ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 9) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

அதிகபட்சமாக ஈரோட்டில் 38.4 டிகிரி செல்சியஸ் (101.12°F) வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 14.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வறண்ட வானிலை நிலவும்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”யோகிபாபுவும், நானும் ட்வின்ஸ் மாதிரி” : ஜெயம் ரவி

வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போல் உதவியை நாடும் தமிழ்நாடு போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share