சென்னை- ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் முதலாவது புல்லட் ரயில், குஜராத் மாநிலம் அகமதாபாத்- மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புல்லட் ரயில் 2027-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்பது எதிர்பார்ப்பு.
இதே போல தென்னிந்தியாவில் 2 புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1) சென்னை- பெங்களூர்- மைசூரு
2) சென்னை- ஹைதராபாத் ஆகிய வழித் தடங்களில் புல்லட் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதில் சென்னை- ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தற்போது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- சென்னை- ஹைதராபாத் இடையேயான தொலைவு: 780 கி.மீ.
- தற்போதைய பயண நேரம்: 12 மணி நேரம்
- புல்லட் ரயிலில் பயண நேரம்: 2.30 மணி நேரம்
- வழித்தடம்: சென்னை- திருப்பதி- ஹைதராபாத்
- தமிழ்நாட்டில் புல்லட் ரயில் பயணிக்கும் தொலைவு: 61 கிமீ
- தமிழகத்தில் சுரங்கப்பாதை நீளம்: 11 கிமீ
- தமிழ்நாட்டில் தேவைப்படும் நிலம்: 223.44 ஹெக்டேர்; சென்னை புறகரில் ரயில் நிலையங்கள் அமைக்க 50 ஏக்கர் நிலம்
தற்போது தமிழ்நாடு அரசிடம் தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தால் இந்த திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவிக்கும் நிலையில் நிலம் கையகப்படுத்துதலுடன் சென்னை- ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுவிடும்.
