ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து… 17 பேர் பலியான சோகம்!

Published On:

| By Selvam

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தானது காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்தனர்.

அவர்கள் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர். 15 பேர் தீக்காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார். building fire near Charminar in Telangana

மத்திய நிலக்கரித் துறை அமைச்சரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான கிஷன் ரெட்டி சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், அதிகாரிகளிடம் தீ விபத்துக்கான காரணம் மற்றும் தற்போதைய மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தீ விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். building fire near Charminar in Telangana

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share