நான் முதல்வன்… 50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்… மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Selvam

2025-26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். Budget session Naan Mudhalvan

நான் முதல்வன் திட்டம் பற்றி பேசிய தங்கம் தென்னரசு,

“முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் உலகை வெல்லும் இளைஞர்களைத் தமிழ் மண்ணில் படைக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்ற விழையும் இத்திட்டத்தில் இதுவரை சுமார் 41.38 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 1 லட்சம் ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.4 லட்சம் மாணவர்கள் இதுவரை வேலைவாய்ப்பினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும்” என்று தெரிவித்தார். Budget session Naan Mudhalvan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share