‘பட்ஜெட் தாக்கல்… தமிழகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்’ : ஸ்டாலின்

Published On:

| By christopher

Budget filing... Tamil Nadu's expectations should be fulfilled: MK Stalin

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல் மற்றும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.

ADVERTISEMENT

இதில், கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  அதைத் தொடர்ந்து, வரும் 23ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதி மற்றும் ஒப்புதலை மத்திய அரசு தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

???? மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

????️ தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

????‍????‍????‍???? பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

???? கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

????️ தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

???? கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீலகிரியில் கனமழை : கலெக்டர் எச்சரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை : கைதான அஞ்சலை, ஹரிதரன் சிறையில் அடைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share