தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை நேற்று (ஜூலை 23) ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 2,320 குறைந்து ரூ.52,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.7,080க்கும், சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.56,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.3.90 காசுகள் குறைந்து ரூ.92.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 24) ஒரு கிராம் ரூ. 0.50 காசுகள் குறைந்து ரூ.92க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.92,000க்கும் விற்பனையாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ShareMarket : முதல் காலாண்டில் பெரும் லாபம் கண்ட இந்திய ஐடி நிறுவனங்கள்!
திடீரென தீப்பிடித்த பேருந்து… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!