பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), முத்தான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது 80 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களாகும்.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் சாதாரண அழைப்புகள் மற்றும் டேட்டா சேவைகளை உள்ளடக்கியது ஆகும். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள், ரூ. 485, ரூ. 499 மற்றும் ரூ. 599 கிடைக்கும்.
பிஎஸ்என்எல்-யின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 82 நாட்கள் வேலிடிட்டியுடன், பயனாளிகள் அளவற்ற கால் வசதி, 100 SMS/நாள் மற்றும் 1.5GB தினசரி டேட்டாவைப் பெறுகிறார்கள்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 80 நாட்கள் வேலிடிட்டியுடன், OTT வசதி, அளவற்ற கால் வசதி, 100 SMS/நாள் மற்றும் 2 GB தினசரி டேட்டாவைப் பெறுகிறார்கள்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 84 நாட்கள், குறிப்பாக வீடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் 84 காலண்டர் நாட்கள் சேவை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அளவற்ற கால் வசதி, 100 SMS/நாள் மற்றும் 5 GB தினசரி டேட்டாவைப் பெறுகிறார்கள். 12 AM முதல் 5 AM வரை வரம்பற்ற இரவு டேட்டா அளிக்கப்படுகிறது .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா பலராமன்
நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் : தப்பிய அமித்ஷா
இரண்டாம் கட்டத் தேர்தல்: பின்னடைவை சந்திக்கிறதா பாஜக? எத்தனை தொகுதிகளை இழக்கிறது?