போர் பதட்டம்… சென்னை டூ லண்டன்… நடுவானில் விமானிக்கு வந்த அழைப்பு!

Published On:

| By Selvam

British Airways flight returns to Chennai

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா இன்று (ஜூன் 22) தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், போர் பதட்டம் காரணமாக சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பாதுகாப்பு காரணங்களுக்கான மீண்டும் சென்னை நோக்கி திரும்பியது.

247 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6.24 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டது. British Airways flight returns to Chennai

இந்த விமானமானது பெங்களூருவைக் கடந்து அரபிக் கடல் மேல் பறந்து கொண்டிருந்தபோது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதால் ​​மத்திய கிழக்கு வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு அவசரத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விமான குழுவினர் உடனடியாக சென்னை மற்றும் லண்டன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொண்டனர்.

பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானத்தை சென்னைக்கு திருப்புமாறு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் சென்னை நோக்கி திரும்பியது.

காலை 8.50 மணியளவில் விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனையடுத்து பயணிகளுக்கான மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. British Airways flight returns to Chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share