வாரத்தின் மற்ற நாட்களில் நடந்தோமா… இல்லையா என்று மறந்து வாரத்தின் முதல் நாளான இன்று நடக்க தொடங்கும்போது முடிந்தவரை செல்போனை வீட்டில் வைத்துவிட்டு நடப்பது நல்லது.
அதையும் மீறி முக்கியமான அழைப்புகள் வரும் என்று செல்போனை எடுத்துச் செல்பவர்களுக்கு போன் அழைப்புகள் வந்தால் ஒருபக்கமாகத் தலையைச் சாய்த்து செல்போனில் பேசிக்கொண்டு நடக்க வேண்டாம். தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து கைவீசி நடப்பதே நல்லது.
சரியான நடைபயிற்சியில் வியர்ப்பது நல்லது. எனவே இறுக்கமான, பாலியஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்துப் போகாமல் வியர்வையை உறிஞ்சும் வகையில் ஏதுவான காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.
அதிக பருமன் உடையவர்கள், இதயம் பலவீனம் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள், எலும்பு – மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோர் நடப்பது நல்லதுதானே என்கிற நினைப்பில் நடப்பதை விட மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று நடைப்பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காளான் மலபாரி!
இதுக்கு தகுதி நீக்கம் பண்ணுவாங்கலா?: அப்டேட் குமாரு
”செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்”: தமிழக அரசு!
