பிருந்தா தான் உண்மையான ‘தக்’ : குஷ்பு

Published On:

| By Kavi

கேரளாவில் முன்னணி விநியோகஸ்தராக இருப்பவர் சிபு தமீம். இவர் தமிழில் விஜய் நடித்த புலி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களை தயாரித்துள்ளார்.

இவரது மகள் ரியா சிபு தயாரிப்பில், முன்னணி நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “தக்ஸ்” திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே. சுரேஷ், முனிஸ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர்ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.

இயக்குனர் கௌதம் மேனன் பேசுகையில், “பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம்.

ADVERTISEMENT

வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார்.

அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார்” என்று வாழ்த்தினார்.

ADVERTISEMENT

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசுகையில் “ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது.

பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைகளத்தை பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது” என்றார்

நடிகை குஷ்பு, “பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர்.

பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார்” என்றார்

இயக்குனர் கே. பாக்யராஜ் கூறுகையில், ” படத்தின் டீசரில் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்த திரைப்படம் குண்டர்கள் எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்று தான் தெரிகிறது.

பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது. இப்போது அவரது இரண்டாவது படம் அதற்கு நேர் எதிராக ஆக்‌ஷன் படமாக இருக்கிறது.

இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்பதை காட்டுகிறது” என்றார்.

Brinda is the real thug

இயக்குனர் பிருந்தா பேசுகையில், “எனது முதல் படமான ஹே சினாமிகாவில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்.

எனது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.

இராமானுஜம்

10 ஆண்டுகள் கழித்து தனுஷின் ’3’ க்கு கிடைத்த வெற்றி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share