குஜராத் மாநிலத்தில் மேம்பாலம் இரண்டாக உடைந்ததில் ஆற்றுக்குள் வாகனங்களுடன் விழுந்த 9 பேர் பலியான துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் வதேதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கக் கூடிய உயர்மட்ட பாலம், மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலம் உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து இரண்டாக உடைந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தன. ஆற்றில் வாகனங்களுடன் விழுந்த 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
