கர்நாடக சட்டமன்ற தேர்தலில் திருமண உடையில், கழுத்தில் மாலையுடன் மணப்பெண் ஒருவர் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு இன்று (மே 10) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸும் போட்டிப் போட்டுக் கொண்டு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர்.
குறிப்பாக தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். அதனால் கர்நாடகாவில் ஆட்சியை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் கர்நாடக மாநிலத்திற்கு நேரடியாக வந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
மறுபுறம் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
மே 8 ஆம் தேதியுடன் பிரச்சாரங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை 7 முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம், மாகோனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் திருமண உடையில் கழுத்தில் மாலையுடன் வந்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.
சிக்கமகளூருவில் உள்ள வாக்குச்சாவடி எண்.165-ல் இன்று காலை வாக்குப்பதிவு செய்த மணப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து கர்நாடகாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மோனிஷா
உதயநிதியின் எதிர்ப்பும் லண்டன் பயணமும் அமைச்சர் பதவியேற்பும்!
சுரங்கத்துறை மாற்றம்? முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு: நடந்தது இதுதான்!
