கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா

Published On:

| By Minnambalam Login1

Bread Tawa pizza recipe in Tamil

இரவு நேர உணவை எளிமையாக முடித்துக்கொள்ள நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக பீட்சா இடம்பிடித்து வருகிறது.

அதை ஆர்டர் செய்து கார்ட்டில் உள்ள காசை காலி செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த பிரெட் தவா பீட்சாவை செய்து அசத்தலாம்.

ADVERTISEMENT

என்ன தேவை?

பிரெட் ஸ்லைஸ் – 6
துருவிய சீஸ் – தேவையான அளவு
வெண்ணெய் – தேவையான அளவு
பீட்சா சாஸ் – 2 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
நறுக்கிய குடமிளகாய் – தேவையான அளவு
ஒரிகானோ – தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் சிறிது வெண்ணெய் போட்டுச் சூடாக்கி பிரெட் ஸ்லைஸின் ஒருபக்கத்தை மட்டும் லேசாக டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும்.

ADVERTISEMENT

டோஸ்ட் செய்த பக்கத்தில் பீட்சா சாஸை முதலில் தடவவும். பிறகு சிறிதளவு துருவிய சீஸை அதில் சேர்க்கவும். பின்னர் அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, ஒரிகானோ, சில்லி ப்ளேக்ஸ் ஆகியவற்றை மேலே தூவவும்.

கடைசியாக மறுபடியும் அதன் மேல் துருவிய சீஸ் சேர்க்கவும். பின்னர் இதனை தவாவில் வைத்து மூடி போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் டோஸ்ட் செய்து எடுக்கவும். சுவையான பிரெட் பீட்சா தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்து அல்வா!

கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா

Photo of author
Minnambalam Login1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share