கிச்சன் கீர்த்தனா: பிரெட் கட்லெட்!

Published On:

| By Minnambalam Login1

Bread cutlet recipe in Tamil

அனைவருக்கும் பிடித்த கட்லெட், அசைவப் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலும், சைவ பிரியர்களுக்கு ஏற்ற வகையிலும் விதம் விதமாக செய்யப்படுகின்றன.

அதற்காக பலவிதப் பொருட்கள் தேவைப்படும். ஆனால் இந்த பிரெட் கட்லெட், வீட்டிலுள்ள பொருட்களுடன் பிரெட்டையும் சேர்த்து எளிதாகச் செய்து ருசிக்க உதவும்.

என்ன தேவை?

பிரெட் ஸ்லைஸ் – 6 (ஓரங்களை நீக்கவும்)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசிக்கவும்)
குடமிளகாய் – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்
பிரெட் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

பிறகு இதில் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.

பிரெட் ஸ்லைஸைத் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும். பின்னர் ஒரு மசாலா உருண்டையை இதன் நடுவில் வைத்து சிறிய பந்தாக உருட்டிக்கொள்ளவும்.

மீதமுள்ள எல்லா பிரெட் ஸ்லைஸின் நடுவிலும் மேற்சொன்னதுபோல மசாலா உருண்டைகளை வைத்து தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருட்டிவைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா

கிச்சன் கீர்த்தனா : இந்தியன் ஸ்டைல் பாஸ்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share