பிரேசில் லெஜண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னையில் இன்று (மார்ச் 30) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. brazil legends vs india all stars match mar 30
பிஃபா கால்பந்து உலகக்கோப்பையை வரலாற்றில் தலைசிறந்த வீரர்களை கொண்ட பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது.

கடைசியாக ரொனால்டினோ, கில்பர்டோ சில்வா, ரிவால்டோ ஆகியோர் அடங்கிய பிரேசில் அணி 2002ஆம் ஆண்டு ஜெர்மனி அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இந்த புகழ்பெற்ற வீரர்கள் அடங்கிய பிரேசில் லெஜண்ட்ஸ் அணிதான், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் முன்னாள் இந்திய நட்சத்திர வீரர்கள் அடங்கிய ’இந்தியா ஆல் ஸ்டார்ஸ்’ அணிக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு கண்காட்சி போட்டியில் விளையாட உள்ளது.

இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம். விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக உள்ளனர்.
ஐஎம் விஜயன் யார் என்று கேட்பவர்களுக்கு, நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த வில்லன் என்றால் சட்டென ஞாபகம் வந்துவிடும்.

பிரேசில் லெஜண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் போட்டியானது இன்று மாலை 7:00 மணிக்கு சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கும்.
மேலும் இந்த போட்டியை ஃபேன்கோட் செயலி மற்றும் இணையதளத்திலும், ஸ்போர்ட்ஸ்டாரின் இணையதளம் மற்றும் செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.