உக்ரைன் மக்களின் துணிச்சல் உலகத்துக்கே உத்வேகம்:  ரிஷி சுனக்

Published On:

| By Minnambalam

“உக்ரைன் மக்களின் துணிச்சல் இந்த உலகத்துக்கே பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது” என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.

அதோடு உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில் பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக ரிஷி சுனக் உக்ரைன் சென்றுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷி சுனக்,

“விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும். உக்ரைன் மக்களின் துணிச்சல் இந்த உலகத்துக்கே பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்ப்பது ஆபத்தானதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share