ADVERTISEMENT

ஆசையாய் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம் – காரணம் என்ன ?

Published On:

| By Pandeeswari Gurusamy

Boy dies after choking on banana

ஈரோட்டில் 5 வயது குழந்தை வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பத்திக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குழந்தை சாய்சரணுக்கு ஆசையாய் வாழைப்பழம் சாப்பிட கொடுத்துள்ளனர். குழந்தை சாய்சரண் வாழைப்பழத்தை சாப்பிட்ட போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சாய் சரணை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை சாய் சரண் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு மருத்துவமனையில் சாய் சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share