பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘கோட்’… 13 நாட்களில் இத்தனை கோடியா?

Published On:

| By Selvam

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் 13 நாட்களில் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரபுதேவா,பிரசாந்த், சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக,  இன்னும் ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாக அறிவித்ததால் ‘கோட்’ படத்திற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதேபோல, விஜய் ரசிகர்களை ‘கோட்’ படம் திருப்திப்படுத்தியது.

படத்தின் நீளம், சில இடங்களில் திரைக்கதை தொய்வு என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் கேமியோ, சிஎஸ்கே, தோனி, மங்காத்தா பிஜிஎம் என ஜிம்மிக்ஸ் செய்து அனைவரும் விரும்பக்கூடிய வகையில் படத்தை அழகுற முடித்திருந்தார் வெங்கட்பிரபு.

‘கோட்’ படம் முதல் நான்கு நாட்களில் மட்டும் ரூ.288 கோடி வசூல் செய்தது. இந்தநிலையில், 13 நாட்களில் ரூ.413 கோடி ‘கோட்’ திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார். இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜாபர் சாதிக் வழக்கு… அமீர் உள்பட 12 பேர் மீது ED குற்றப்பத்திரிகை தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share