ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பின்னர், சிவாரத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை அழைத்ததற்காக, டி.சிவக்குமார் சத்குருவுக்கு நன்றி தெரிவித்தும் சோசியல் மீடியாவில் பதிவு வெளியிட்டிருந்தார்.Hindu and will die as Hindu
சிவாரத்திரி நிகழ்ச்சியில் சிவக்குமார் பங்கேற்றது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பி.வி. மோகன், ‘ சத்குரு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார். சத்குருவின் கொள்கைகள் ஆர்எஸ்எஸ் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. அப்படியிருக்கையில், இந்த நிகழ்வில் டி.சிவக்குமார் பங்கேற்கலாமா? ‘என்று கேள்வி எழுப்பினார். born Hindu and will die as Hindu
இது தொடர்பாக ஹூப்ளியில் நேற்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது, ‘கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கும்பமேளாவுக்கு சென்றது, கோவையில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்து, காங்கிரசிலேயே சர்ச்சை நடக்கிறது. கும்பமேளாவுக்கு, கோவைக்கு சென்றது இயல்பான விஷயம். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இது காங்கிரசாருக்கு தெரியவில்லை. சிவகுமார் காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டிருந்தால், அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யட்டும். காங்கிரஸ் கட்சியினர் இந்துக்களை எதிர்க்கின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல’ என்று கூறியுள்ளார்.born Hindu and will die as Hindu
இந்த நிலையில், தன் மீதான கட்சியினரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள டி.சிவக்குமார் செய்தியாளர்களிடத்தில் நேற்று பேசியதாவது, ‘ நான் ஒரு இந்து. இந்துவாக பிறந்தேன். இந்துவாகவே சாவேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என்பது என்ன? சிவனின் பெயர்தானே. இதற்காக, மல்லிகார்ஜூன கார்கே பெயரை மாற்றிக் கொள்வாரா? நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன்’ என்று தெரிவித்துள்ளார். Hindu and will die as Hindu1