பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. bonus mark for 10th social science paper
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஏப்ரல் 15ஆம் தேதி தேர்வு நிறைவுபெற்றது.
பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 21 முதல் 30ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 21) தொடங்கியது. இந்தப் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில் ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம் ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார் என்று குறிப்பிட்டு மூன்று ஆப்சன்கள் கொடுத்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது
இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக கூறி இதற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தசூழலில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நாளான இன்று (ஏப்ரல் 21) தேர்வு துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆம் கேள்வியில் 2 வாக்கியங்களும் முரணாக இருந்த காரணத்தால், 4ஆவது கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தாலே கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
வரும் மே 19 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. bonus mark for 10th social science paper
