தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 4) 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி சென்னை மற்றும் கோவையில் உள்ள பி.எஸ்.பி.பி தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால் அது புரளி என்பது தெரியவந்தது. Bomb threats to schools again
தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.பி.பி மில்லேனியம் தனியார் பள்ளிக்கு நேற்று இரவு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார் மிரட்டல் புரளி என்று உறுதி செய்தனர்.
எனினும் இன்று காலை தேர்வெழுத வந்த பிளஸ் 1 மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே இன்று காலையில் சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி தனியார் பள்ளிக்கும் இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரு பள்ளிகளிலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இன்று தங்களது குழந்தைகளை பள்ளியில் விட வந்த பெற்றோர், மிரட்டல் செய்தி கேட்டு பதற்றத்துடன் அவர்களை வீட்டுக்கு திரும்ப அழைத்து சென்றனர்.
இதன் காரணமாக சென்னை போரூர் மற்றும் கோவை வடவள்ளி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கல்பாக்கம் ஈணுலை… உயிர்வாழ தகுதியற்றதாக தமிழ்நாடு மாறிவிடும் : சீமான் எச்சரிக்கை!
சென்னை வரும் பிரதமர் மோடி : பாதுகாப்பு அதிகரிப்பு!
Bomb threats to schools again