ADVERTISEMENT

5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 4 நாட்களில் இது 3ஆவது முறை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Bomb threats to 5 schools in Delhi

தலைநகர் டெல்லியில் நேற்று 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பள்ளிகளை குறி வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இன்று (ஆகஸ்ட் 21) காலை பிரசாத் நகர் மற்றும் துவாரகா செக்டார் 5 இல் உள்ள பிஜிஎஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி உட்பட டெல்லியில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று டெல்லியில் செயல்பட்டு வரும் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நான்கு நாட்களில் 3 ஆவது முறையான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே \அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share