நாளை முதல்வர் விஜய் வருகை; இன்று வெடிகுண்டு மிரட்டல்!

By Kavi

|

Published on 31 May 2026, 7:33 PM

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், முக்கிய பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (மே 31) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் தயால் இன்று காலைதான் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பு ஏற்று சில மணி நேரங்களிலேயே இப்படி ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

ADVERTISEMENT

அதில் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் சற்று நேரத்தில் அது வெடித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சந்தேகிக்கும் படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை.

இதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மெயில் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

நாளை தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, திருச்சி செல்கிறார்.

இதனால் அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திருச்சி மாவட்டம் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நிலையில் யார் இப்படி ஒரு மெயில் அனுப்பியது என போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel