கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது நாளாக தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Bomb threat to the District Collector's office

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக 3 ஆவது நாளாக இன்று (டிசம்பர் 17) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சினிமா பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களில் இன்று 18ஆவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

டார்க் நெட் வாயிலாக வெடி குண்டு மிரட்டல் விடுப்பதால் மின்னஞ்சல் வரும் ஐ.டியை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இதனால் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share