முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… என்ன நடந்தது?

Published On:

| By Kavi

முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்ட நிலையில், அவர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் செப்டம்பர் 2 வரை அங்கு தங்கியிருப்பார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் நேற்றிரவு சென்னையில் இருந்து முதல்வர் பயணம் மேற்கொண்ட எமிரேட்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

விமானம் புறப்பட்ட பிறகே, அந்த மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்ததாக தெரிகிறது.

ADVERTISEMENT

இதனால் உடனடியாக விமானத்தை சோதனையிட முடியாமல் அதிகாரிகள் பதற்றத்தில் இருந்துள்ளனர். இன்று அதிகாலை விமானம் துபாயில் தரையிரங்கியதும், அங்கு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அதன்பின்னரே வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அதுபோன்று சென்னை விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.  இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் சோதனை நடத்தினர். பின்னர் அதுவும் புரளி என்பது தெரியவந்தது.

இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

டிஜிட்டல் திண்ணை: அமெரிக்கா புறப்பட்ட ஸ்டாலின்… துரைமுருகன் ஏர்போர்ட் சென்ற பின்னணி!

மேற்கு வங்கத்தில் பாஜக பந்த்: ஹெல்மெட்டுடன் பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share