கோவையில் பதற்றம்: ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Bomb threat to Coimbatore District Collectorate

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 26) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய மின்னஞ்சல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து காவல் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

வெடிகுண்டு மிரட்டலால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share