கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Pinarayi Vijayan
கேரளாவின் தம்பனூர் காவல்நிலையத்திற்கு இன்று ஜூலை 13-ந் தேதி ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கிளிஃப் ஹவுஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடந்த போது அவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களை குறிவைத்து சமீபத்தில் வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுடன் இந்த அச்சுறுத்தல் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.
