தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வீட்டில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனையை போலீசார் இன்று (செப்டம்பர் 19) நடத்தினர்.
நடிகர் விஜய்யின் சென்னையை அடுத்த நீலாங்கரை பங்களாவில் ரசிகர் ஒருவர், மாடியில் ஏறி ஒருநாள் முழுவதும் பதுங்கி இருந்தார். நடிகர் விஜய், வாக்கிங் செல்லும் போது அந்த இளைஞரைப் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் பாதுகாவலர்களை அழைத்து அந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விஜய் வீட்டு மாடியில் பதுங்கி இருந்த இளைஞர் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மனநிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவரை கீழ்ப்பாக்கம் மனநிலை காப்பகத்தில் போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இன்று வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனையை போலீசார் நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
