ADVERTISEMENT

ரஜினியுடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அமிதாப்பச்சன்

Published On:

| By Monisha

Bollywood Star Amitabh Bachchan in Rajinikanth's 170th Movie

இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இன்றளவும் கொண்டாடப்படும் அமிதாப்பச்சன்
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இருவரும் 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹும்’ (HUM) படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 32 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனால் தற்போது ரஜினிகாந்த், ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் மீது தான் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ரஜினியின் 170வது படமாக தயாராகவிருக்கும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் கேட்கப்பட்டது.

ஆனால், விக்ரம் தரப்பிலிருந்து நடிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதனால் ரஜினிகாந்த்துக்கு இணையான அந்த கேரக்டரில் நடிக்க அமிதாப் பச்சனிடம் கதை சொல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கதை கேட்ட அமிதாப்பச்சன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் என இயக்குநர் த.செ.ஞானவேல்ராஜா வட்டாரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இராமானுஜம்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வெஜ் நக்கட்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share