2015 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் அவரது தம்பியும் நடிகருமான ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தனி ஒருவன்” மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமிக்கு தான் அதிக பாராட்டுகள் கிடைத்திருந்தது.
சமீபத்தில் தனி ஒருவன் 2 படத்தை இயக்குவதாக இயக்குனர் மோகன் ராஜா அறிவித்தார். தனி ஒருவன் முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தையும் தற்போது தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தனி ஒருவன் 2 புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.
https://twitter.com/Always_Dhina/status/1696164120129609830
தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை நயன்தாரா இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றார்.
ஆனால் தனி ஒருவன் 2 படத்தில் எந்த நடிகர் வில்லனாக நடிக்கிறார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் இறந்து விட்டதால் இரண்டாம் பாகத்தில் நிச்சயம் அரவிந்த் சாமி இருக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
தனி ஒருவன் 2 வில்லன் யார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அவர்களை தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
அசோக் செல்வன் பட ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?
பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த கூல் சுரேஷ்… வெளியான ஷாக் வீடியோ!