நடிகை ஹனி ரோஸ் தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம் புலி என பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் ஹனி ரோஸை தங்களது கடை திறப்பு விழாக்களுக்கு சில தொழிலதிபர்கள் அழைப்பது உண்டு. இதுபோல் அவர் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது, அவரைப் பார்ப்பதற்கும், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுப்பதற்கும் ரசிகர்கள் கூடுகின்றனர். இந்நிலையில், கேரள தொழிலதிபர் ஒருவர், ஹனி ரோசுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியானது.
இது குறித்து ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது, கேரளாவைச் சேர்ந்த முக்கிய பணக்கார பிரமுகர் ஒருவர், என்னைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். என் உடல் அமைப்பு குறித்து குறிப்பிட்டு, மிகவும் அசிங்கமான வார்த்தைகள் பேசுகிறார். எனக்கு ஒரு திறப்பு விழாவில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம் காரணமாக, இனிமேல் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் யார் என்பது தெரியவந்துள்ளது. பிரபல செம்மனூர் ஜுவல்லரி நிறுவனத்தின் அதிபரான பாபி செம்மனூர் மீதுதான் ஹனிரோஸ் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாபி அளித்துள்ள விளக்கத்தில் ‘சில மாதங்களுக்கு முன்பு நடந்த என் கடை நிகழ்ச்சியில் நான் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் அந்த நிகழ்ச்சியின் போது, மகாபாரத்தின் குந்திதேவியுடன் ஹனிரோஸை ஒப்பிட்டு பேசினேன். அப்போதெல்லாம் அவர் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வழக்கமாக இது போன்ற கடை திறப்பு விழாவுக்கு நடிகைகள் நகைகள் அணிந்து வருவார்கள். அதை பார்த்துதான் குந்திதேவி என்று கூறினேன். இது ஒன்றும் தவறானதாக எனக்கு தெரியவில்லை. அப்போது நான் பேசியதற்கு இப்போது புகார் அளிப்பது ஏன் ?’என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹனிரோஸ் கொடுத்த புகாரில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்ணூர் மாவட்டம் அலகோடு நகரில் நடந்த புதிய கடை திறப்பு விழாவில் பாபி செம்மனூர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் மத்திய போலீசார் பாபி மீது ஜாமீனில் வர முடியாத 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாபி செம்மனூர் இதுநாள் வரை அறப்பணிகளுக்காக அறியப்பட்டவர். பெரும் பணக்காரராக இருந்தாலும் சர்வசாதாரணமாக அனைவரிடத்தில் பழகக்கூடியவர். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
போக்சோ வழக்கில் கைது : அதிமுக நிர்வாகியை கட்சியைவிட்டு தூக்கிய எடப்பாடி
கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!