காசு வந்தா, வாயை திறக்காதீங்க: படகோட்டிக்கு இடியாய் இறங்கிய வரி!

Published On:

| By Kumaresan M

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் கும்பமேளா 45 நாள்கள் விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த கும்பமேளாவால் உத்தரபிரதேசத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சாதாரணமாக பிரயாக்ராஜில் ஒரு படகோட்டி மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். ஆனால், கும்பமேளா சமயத்தில் படகோட்டிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.boatman earn 30 crore in 45 days

இந்த நிலையில், மகா கும்பமேளா பற்றி உத்தரபிரதேச சட்டமன்றத்தில் பெருமையாக பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் ”கும்பமேளாவில் பிந்து மெஹ்ரா என்பவரும் அவரின் குடும்பத்தினரும் படகு ஓட்டி 45 நாள்களில் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். இவர்களிடத்தில் 150 படகுகள் உள்ளது. ஒவ்வொரு படகும் 45 நாட்களில் தலா ரூ.23 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு 52 ஆயிரம் வரை ஒரு படகு சம்பாதித்து கொடுத்துள்ளது” என்று பேசியிருந்தார்.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சை கேட்ட வருமான வரித்துறைக்கு மூக்கு வேர்த்தது. உடனடியாக 30 கோடிக்கு வரியாக 12.8 கோடியை செலுத்த பிந்து மெக்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமான வரித்துறை சட்டம் 4 மற்றும் 68-வது சட்டப்பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை பார்த்ததும் பிந்து மெஹ்ரா அதிர்ச்சியில் உறைந்து போனார். படகு ஓட்டுபவர்களுக்கான சம்பளம் மற்றும் அரசுக்கான கட்டணம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படகுகள் வாங்க தன் தாயாரின் நகைகளை அடகு வைத்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். boatman earn 30 crore in 45 days

கும்பமேளாவை சிறப்பாக நடத்த உத்தரபிரதேச அரசு 7,500 கோடி செலவழித்துள்ளது. 45 நாட்களில் 66 கோடி பேர் உலகம் முழுக்க வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share