சென்னை மெரினா முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி வரையிலும் நேற்று இரவு நீல நிறத்தில் கடல் அலைகள் ஒளிர்ந்தன.
பார்ப்பதற்கு ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தில் வரும் காட்சிகள் போல கண்களுக்கு விருந்தளித்த இந்த கடல் அலைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
சரி… ஏன் இந்த கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்கிறது? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்திருந்திருக்கும்.
இதற்கு பின்னால் இருப்பது எந்த மாந்திரீக சக்தியோ, அதிசயமோ அல்ல. இது முழுக்க முழுக்க கடலில் அவ்வபோது நடைபெறும் இயற்கையான நிகழ்வு என்கிறார் கடல் ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக நீல நிறத்தில் இதுபோன்று பளீரென பொங்கி வரும் அலையானது ஆங்கிலத்தில் ’ஃப்ளோரசன்ட் வேவ்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஃப்ளோரசன்ட் அலைகள் பயோலுமினசென்ஸ் ஆல்கா என்ற பாசியால் தான் ஏற்படுகிறது.
பொதுவாக பயோலுமினசென்ஸ் என்பது மீன், ஜெல்லிமீன்கள், சுறாக்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் வெளியேற்றும் பாசி ஆகும். இது ஒளிரும் தன்மையுடையது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் அலுவலகமான நேஷனல் ஓஷன் சர்வீஸ் இதுகுறித்து கூறுகையில், “வேட்டையாடுபவர்களை எச்சரிக்க அல்லது தவிர்க்க, இரையை கவர்ந்திழுக்க மற்றும் அதே இனத்தின் உறுப்பினர்களுக்கு இடையே தொடர்பு கொள்ள கடல்வாழ் உயிரினங்கள் பயோலுமினசென்ஸ் பாசிகளை வெளியேற்றுகின்றன’ என கூறுகிறது.
மேலும் இந்த பாசிகள் நீல, பச்சை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ளன. கடலில் அலைகள் மோதும் இடத்தில் இடத்தில் இவற்றை பிரகாசமாக நம்மால் பார்க்க முடியும்.
பொதுவாக ஃப்ளோரசன்ட் அலைகள் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மிகவும் எளிதாகக் காணப்படுகின்றன.
உலகில் தெற்கு கலிபோர்னியாவில் லாகுனா பீச், ஹண்டிங்டன் பீச், நியூபோர்ட் பீச், என்சினிடாஸ், கார்டிஃப் ஸ்டேட் பீச், மரின் கவுண்டியில் உள்ள டோமல்ஸ் விரிகுடா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சாண்டா மோனிகா பே மற்றும் பாயிண்ட் ரெய்ஸ் போன்ற இடங்களில் அடிக்கடி பார்க்க முடியும்” என்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘மர்மதேசம்’ இயக்குநரின் ரீ-எண்ட்ரி!
வெளுத்து வாங்கும் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!