வாரத்தின் முதல் நாளான இன்று கருப்பு திங்கள் (Black Monday) என்றே முதலீட்டாளர்கள் அழைக்கிறார்கள். Blood Bath in Indian Markets
காரணம் உலக அளவிலும் இந்திய அளவிலும் பங்குச் சந்தை மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. Blood Bath in Indian Markets
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். இதன் காரணமாக உலக அளவில் இன்று பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றத்தினால் பங்குகளை அதிக அளவிற்கு விற்கத் தொடங்கிவிட்டனர்.
காலை முதலே இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது.
காலை 9:16 நிலவரப்படி கிட்டத்தட்ட 19 லட்சம் கோடியை இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பங்குச்சந்தை நாளின் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 2226.79 புள்ளிகள் சரிந்து 73137.90 புள்ளிகளாக உள்ளது.
இது கடந்த வெள்ளிக்கிழமையின் இறுதி சந்தை நிலவரமான ஒட்டுமொத்த சென்செக்ஸ் மதிப்பில் 2.95% குறைவாகும்.
அதுவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 742.85 புள்ளிகள் சரிந்துள்ளது 22161.60 புள்ளியாக உள்ளது
இது கடந்து வெள்ளிக்கிழமையின் இறுதி சந்தை நிலவரமான ஒட்டுமொத்த நிஃப்டி மதிப்பில் 3.24% குறைவாகும்.
இன்றைய பங்குச் சந்தையின் இறுதி நிலவரத்தில் மூலதனச் சந்தை வெளிநாட்டில் இருந்து பங்குகள் மீது முதலீடு செய்தவர்களின் மதிப்பை விட பங்குகளை விற்றவர்களின் மதிப்பு அதிகமாகவும், உள்நாட்டிலிருந்து பங்குகளை முதலீடு செய்தவர்களின் மதிப்பை விட விற்றவர்கள் பங்குகளை விற்றவர்களின் மதிப்பு குறைவாக உள்ளது.
இன்றைய நாளில் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்த மூலதனச் சந்தை முதலீடுகளின் மதிப்பு 13,372.27 கோடியாகவும் மற்றும் விற்பனையின் மதிப்பு 22,412.28 கோடியாகவும் உள்ளது.
இதுவே உள்நாட்டும் முதலீட்டாளர்களிடம் இருந்து வந்த மூலதனச் சந்தை முதலீடுகளின் மதிப்பு 26,528.23 கோடியாகவும் மற்றும் விற்பனையின் மதிப்பு 14,405.78 கோடியாகவும் உள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிகளவிற்கு பங்குகளை வாங்கினாலும் இது ஆறுதல் அடையக்கூடிய செய்தியாக இல்லை என்று முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். Blood Bath in Indian Markets