மோடிக்கு எதிர்ப்பு- சென்னையில் ஜூலை 27-ல் கறுப்பு கொடி போராட்டம்- மே 17 இயக்கம்

Published On:

| By Mathi

Protest Modi Tamilnadu

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஜூலை 27-ந் தேதி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
தமிழ்நாட்டினை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடியின் தமிழக வருகையை கண்டித்து மே17 இயக்கத்தின் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ADVERTISEMENT

கீழடி ஆய்வறிக்கை மறுப்பு, கல்வித்துறை நிதி மறுப்பு, தமிழ் மொழி நிதி மறுப்பு உள்ளிட்ட பாஜக-மோடி அரசின் தமிழ் இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த அணிதிரள்வோம் என அழைக்கிறது மே17 இயக்கம்.

மீனவர் படுகொலை முதலாக தமிழர் உரிமைகளை நிராகரித்து செயல்படும் பாஜக அரசின் துரோகத்தை எதிர்த்து நிற்பது ஒவ்வொரு தமிழரின் கடமை என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share