முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா பறிமுதல் : காவல் துறை விளக்கம்!

Published On:

| By christopher

முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இந்த நிக்ழ்ச்சியில் பங்கேற்பதற்காக கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும் வருகை தந்திருந்தனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகளில் சிலர் கருப்பு நிற துப்பட்டா, கருப்பு நிற பேக் அணிந்து வந்தனர். அதனைக் கண்ட போலீசார் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “எழும்பூர் பகுதியில் நேற்று (ஜனவரி 5) நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல், பாதுகாப்பு சென்னை காவல் பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம் இருந்து கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.

இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது என தெரியவருகிறது.

இனி அவ்வாறு நிகழாவண்ணம் இருப்பதற்கு சென்னை காவல் பிரிவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மதகஜராஜா பட விழாவில் கைநடுக்கத்துடன் பேசிய விஷால்… கலங்கும் ரசிகர்கள்!

பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்!

டாப் 10 நியூஸ் : ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share