மூளையைக் கசக்கும் கதை சொல்லல்! Black Bag Movie Review
ஜேம்ஸ் பாண்ட், ஈதன் ஹண்ட், ஜேசன் பார்ன் போன்ற உளவாளிப் பாத்திரங்கள் ரொம்பவே பிரபலமாக இருக்கின்றன. சமீபகாலமாக ‘பிளாக்பஸ்டர்’ வெற்றிகளைக் குவித்த இந்தியப் படங்களில் சில ‘ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்’ வகைமையில் அமைந்திருந்தன.
உலகளவில் அது போன்ற படங்களில் சண்டைக்காட்சிகளும் காதல் தருணங்களும் மிகுந்திருப்பதைக் காண முடியும். முக்கியமாக, அவற்றின் திரைக்கதைகள் சுவாரஸ்யத்திற்கு உத்தரவாதம் தரும். ஆனால், உளவு பார்க்கும் கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்ட எல்லா திரைப்படங்களும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

மிகச்சில படங்களில் ஆக்ஷன் பெயரளவுக்குத்தான் இருக்கும். மாறாக, முக்கியக் கதாபாத்திரங்கள் படம் முழுக்கப் பேசிக்கொண்டே இருக்கும். அவற்றின் வழியே நம் மனதில் அந்த கதை எத்தகையது என்பது பிடிபடும்.
‘டிங்கர் டெய்லர் சோல்ஷியர் ஸ்பை’, ‘மிஷன் இம்பாஸிபிள் பார்ட் 1’, ’கேஸினோ ராயல்’, ‘கோல்டன் ஐ’ போன்ற படங்கள் அந்த வகையில் அடங்கும். அவற்றின் திரைக்கதைகளில் சாகசத்துக்கும் சண்டைக்கும் குறைவான இடமே தரப்பட்டிருக்கும்.
ஆனால், படம் பார்த்து முடித்த பின்னர் ‘இதற்கு அர்த்தம் என்ன’ என்று ஒவ்வொரு பாத்திரமும் சொன்ன வாக்கியங்களை ‘டீகோட்’ செய்து பார்த்து சில அர்த்தங்களை உணர முடியும். அவை நம் மூளையைக் கசக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கும். Black Bag Movie Review
கிட்டத்தட்ட அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது ஆங்கிலப் படமான ‘பிளாக் பேக்’ (Black Bag). ஓசன்’ஸ் லெவன், எரின் ப்ரோக்கோவிச், செக்ஸ் லைஸ் அண்ட் வீடியோடேப்ஸ் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. Black Bag Movie Review
‘பிளாக் பேக்’ தரும் திரையனுபவம் எத்தகையது? Black Bag Movie Review
யார் அந்த துரோகி?! Black Bag Movie Review
பிரிட்டன் உளவுப்பிரிவில் பணியாற்றும் ஜார்ஜ் வுட்ஹவுஸ் அவரது மேலதிகாரி மீசமைச் சந்திக்கிறார். அப்போது, உயர் ரகசிய மென்பொருளான செவெரஸ் குறித்த தகவல்கள் கசிந்துவிட்டதாக அதிர்ச்சி அளிக்கிறார் மீசம். அந்த துரோகத்தின் பின்னால் இருப்பவர்கள் என்று சிலரைச் சந்தேகிப்பதாகவும், அதிலொருவர் உளவுப் பிரிவில் பணியாற்றும் ஜார்ஜின் மனைவி கேத்தரின் என்றும் கூறுகிறார். Black Bag Movie Review

அதற்கடுத்த நாள் இரவில் தனது வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார் ஜார்ஜ். அப்போது மீசம் குறிப்பிட்ட நான்கு பேரை வரவழைக்கிறார். செயற்கைக்கோள் பட நிபுணரான கிளாரிசா, அவரது பாய்ப்ரெண்டும் உளவுப்பிரிவில் பணியாற்றும் ஏஜெண்டுமான ப்ரெடி, ஏஜென்சி சைக்கியாட்ரிஸ்ட் ஜோ மற்றும் அவரது காதலரும் இன்னொரு ஏஜெண்டுமான ஜேம்ஸ் உடன் கேத்தரினும் அதில் பங்கேற்கிறார். Black Bag Movie Review
அவர்களோடு பேசுகையில், ஒவ்வொருவரிடத்திலும் சில பொய்கள் ஒளிந்திருப்பதை உணர்கிறார் ஜார்ஜ். யாரைச் சந்தேகப்படுவது, யாரைத் தவிர்ப்பது என்பது புரியாமல் தவிர்க்கிறார்.
இந்த நிலையில், அவரது வீட்டிலுள்ள குப்பைக்கூடையில் ஒரு தியேட்டர் டிக்கெட் இருப்பதைக் காண்கிறார் ஜார்ஜ். அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தைக் காணலாமா என்று மனைவியிடம் கேட்கிறார். ‘நான் இன்னும் அதனைப் பார்க்கவில்லை. ஆனால், புதன்கிழமை நான் வெளிநாடு செல்கிறேன்’ என்கிறார். அப்படியானால், செவ்வாய்கிழமை செல்வோம் என்கிறார் ஜார்ஜ்.
அதன்படியே செவ்வாய்கிழமையன்று ஜார்ஜும் கேத்தரினும் தியேட்டருக்குச் செல்கின்றனர். அதற்கடுத்த நாள் கேத்தரின் எங்கு செல்கிறார் என்பதை ரகசியமாகக் கண்டறிகிறார் ஜார்ஜ்.
ஜுரிச் செல்லும் கேத்தரின் அங்கு ஒரு ரஷ்ய ஏஜெண்டை சந்திக்கிறார். அதனை கிளாரிசா உதவியோடு செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் காண்கிறார் ஜார்ஜ்.
அந்த நேரத்தில், ஜுரிச்சில் சிறை வைக்கப்பட்டிருந்த ரஷ்ய உளவுப்பிரிவு தலைவர் தப்பித்து விடுகிறார். செயற்கைக்கோள் கண்காணிப்பு கேத்தரின் இருக்குமிடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால் அது குறித்த தகவல் ஏதுமில்லை.
இந்த உண்மை கேத்தரின், ஜார்ஜ் இருவருக்கும் தெரிய வருகிறது. அதற்குள் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு வேவு பார்த்ததை உணர்கின்றனர்.
விருந்துக்கு வந்த நால்வரில் ஒருவர்தான் துரோகி என்பதைக் கண்டறிகின்றனர். அதன்பின் என்ன ஆனது? செவரஸ் கசிவுக்குப் பின்னால் இருப்பது யார் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
சுவாரஸ்யமான இந்தக் கதையைப் பரபரப்பூட்டும் வகையில் ஆக்ஷன் அட்வெஞ்சர் வகைமையில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க். மாறாக, உளவாளிகளின் உலகை ‘சைக்காலஜிகல் ட்ராமா’ வகைமையில் அணுகியிருக்கிறார்.
அதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிறீர்களா?
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஏதாவது ஒரு பாத்திரம் இன்னொன்றுடன் பேசிக்கொண்டே இருக்கிறது. அப்பேச்சில் மறைந்திருக்கும் முரண்கள் தான் நமக்கு அதிர்ச்சியூட்டும் உண்மையைச் சொல்வதாக இருக்கின்றன.

ஒரு வகை அனுபவம்! Black Bag Movie Review
’ஒருமுறை மட்டுமே பார்த்தால் புரியாது. அடுத்தடுத்து பல முறை பார்த்தால், பல விஷயங்கள் கிடைக்கும்’ என்று சில தீவிர சினிமா ரசிகர்கள் சில திரைப்படங்களைப் பரிந்துரைப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளை மட்டுமே தருவேன் என்று அடம்பிடிப்பவர்களில் ஒருவர் ஸ்டீவன் சோடர்பெர்க். அவர் தந்த ‘ஓசன்ஸ் லெவன்’ மாதிரியான கமர்ஷியல் படங்கள் கூட அந்த வகையில்தான் அமைந்திருக்கும். இப்படம் அதனை வெகுதீவிரமாகப் பின்பற்றியிருக்கிறது.
டேவிட் கெப் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.
பாத்திரங்களின் தோற்றம், உடல்மொழி, மனப்பாங்கு, பேசும் முறை, சிந்திக்கிற விதம் என அனைத்தையும் தனித்துவத்துடன் வடிவமைத்திருக்கிறார். அதனால், வசனங்கள் வழியே எளிதாக அவரால் கதையை நகர்த்த முடிந்திருக்கிறது.
‘யார் அந்த துரோகி’ என்று தெரியவந்தபிறகும், இரண்டொரு காட்சிகள் திரையில் ஓடுகின்றன. அதிலும் சுவாரஸ்யத்தைப் பொதித்து வைத்திருக்கிறார் மனிதர். அது, இப்படத்தின் அடிநாதம் என்னவென்பதைத் துல்லியமாகச் சொல்கிறது. ஆனால், அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இப்படத்தின் ‘டீகோடிங்’ பற்றி இணையத்தைக் கொஞ்சம் அலசி ஆராயத்தான் வேண்டும்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை பீட்டர் ஆண்ட்ரூஸ் என்ற பெயரிலும், படத்தொகுப்பை மேரி ஆன் பெர்னார்டு என்ற பெயரிலும், இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க்கே கையாண்டிருக்கிறார். இரண்டும் அசத்தல் ரகத்தில் அமைந்திருக்கின்றன.
திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு ஏற்ற மூடை உருவாக்கும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் பிலிப் மெசினா. அவரது வண்ணத் தேர்வுகள், நம் மனதைக் குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்க உதவியிருக்கிறது.
இதர தொழில்நுட்பங்கள் அனைத்தும் ‘பெஸ்ட்’ ரகத்தில் இருப்பதைப் படம் பார்த்தால் உணரலாம். அதேநேரத்தில், வழக்கமான ‘ஸ்பை ஆக்ஷன் அட்வெஞ்சர்’ அனுபவங்களை இப்படம் தராது என்பதையும் முன்னரே உணர்ந்து, அதற்கேற்ப தியேட்டருக்குள் நுழைவது நல்லது.
இதில் ஜார்ஜ் – கேத்தரின் ஆக மைக்கேல் பாஸ்பெண்டர், கேட் பிளான்செட் இருவரும் நடித்திருக்கின்றனர். இது போக மரிசா அபேலா, டாம் பர்கே, நவோமி ஹாரிஸ், ரெஹே ஜீன் பேஜ் ஆகியோருடன் ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிரஸ்னனும் இதில் இருக்கிறார்.

மொத்தமாகச் சுமார் ஒரு டஜன் பாத்திரங்களே இருந்தாலும், அவை நடமாடும் உலகம் பெரியது என்பதைக் காட்சியாக்கத்தின் வழியே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ஸ்டீபன் சோடர்பெர்க். அதேநேரத்தில், காட்சிகளுக்குத் தேவையான பட்ஜெட்டில் சிறப்பான ஆக்கத்தைத் தந்திருக்கிறார்.
‘ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சில தகவல்களை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில் நிச்சயம் ‘பிளாக் பேக்’ இருக்குமென்று கூறலாம். Black Bag Movie Review
அதேநேரத்தில், ஆக்ஷன் பட விரும்பிகள் இப்படத்தைப் பத்து நிமிடங்கள் கூடச் சேர்ந்தாற்போலப் பார்க்க முடியாது. போலவே, வசன நடையும் காட்சிகள் நகரும் விதமும் நம்மைக் குழப்பத்திலேயே வைத்திருக்கும். படம் பார்த்து முடிந்தபிறகும் ஒரு முடிவுக்கு வர நிறைய நேரம் ஆகும். அது போன்றவற்றை இப்படத்தின் குறைகளாகச் சொல்லலாம்.
பொய்க்குப் பதிலாக உண்மையைச் சொல்ல வேண்டிய சூழலில், அந்த உண்மையைச் சொல்ல முடியாத இக்கட்டில், ‘இந்த கேள்விக்கு பாஸ் சொல்லிக்கலாமா’ என்று கேட்போம் அல்லவா? கிட்டத்தட்ட அந்த தொனியில் பிரிட்டன் உளவுப்பிரிவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ‘பிளாக் பேக்’ என்கிறார்கள். அதுவே இப்படத்தின் டைட்டில்.
அப்படி மறைத்து வைக்கப்படும் தகவல்கள் எப்படிப்பட்ட முரணை உண்டாக்க்குகிறது என்று சொன்ன வகையில், ‘பிளாக் பேக்’ வழியே நல்லதொரு காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க். Black Bag Movie Review
