காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முன்னாள் டிஜிபி பி.கே.ரவி

Published On:

| By Selvam

bk ravi joins congress

முன்னாள் டிஜிபி பி.கே.ரவி பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று (நவம்பர் 2) இணைந்தார்.

1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பி.கே.ரவி, தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாகவும் ஐ.நா அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். இவர் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களே முன்னரே விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

பிகாரை பூர்வீகமாக கொண்ட பி.கே.ரவி அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவார் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜகவில் மீண்டும் திருச்சி சூர்யா: அண்ணாமலை அறிவிப்பு!

இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share