தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு செல்கிறார் என தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாத யாத்திரை சென்றது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மறுபக்கம் 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் அண்ணாமலை பெங்களூரு சென்றுள்ளார்.
“அவர், வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு படிக்க செல்கிறார். அது மூன்று மாத படிப்பாகும். இதற்காக விசா நடைமுறைக்காக பெங்களூரு சென்றுள்ளார்” என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்.
“அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்வதால், இந்த மூன்று மாத காலத்துக்கு கட்சியை யார் வழிநடத்துவார்கள். ஏதேனும் குழு அமைக்கப்படுமா என்பதெல்லாம் அடுத்தகட்டமாகத்தான் தெரியவரும்” என்றும் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி: பேரவையில் உதயநிதி அறிவிப்பு!
Comments are closed.