பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியானது..பரபரப்பைக் கிளப்பும் ஆந்திர அரசியல்!

Published On:

| By vivekanandhan

கடந்த 3 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்நிலையில் தற்போது தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூன்று கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பாஜக மற்றும் தெலுங்கு தேசத்திற்கு இடையிலான உறவு மிகவும் பழமை வாயந்தது.1996-லேயே தெலுங்கு தேசம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. வாஜ்பாய் மற்றும் மோடி இரண்டு அரசுகளிலும் இணைந்து பணிபுரிந்துள்ளது…தொகுதி உடன்பாடுகள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மிக மோசமான சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பாஜகவும் தெலுங்கு தேசமும் இணைவது இந்த நாட்டிற்கும், மாநிலத்திற்கு Win-Win சூழலைக் கொடுக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக Press trust of india-வின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடும்பத்தில் சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் இணைவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் பாஜக மற்றும் ஜன சேனா இரண்டிற்கும் சேர்த்து 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசமும், ஜன சேனா கட்சியும் பாஜக கூட்டணியில் இணைந்து ஆந்திர அரசியலில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

– விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!

“அடுத்தடுத்து 5 மாநிலங்களில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்” : என்.சி.பி துணை இயக்குநர் பேட்டி!

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : திமுகவில் 4 பெண் வேட்பாளர்கள்… ஸ்டாலின் லிஸ்டில் யார் யார்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share