டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்!
1) தொழில் முனைவோர்களுக்கான முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
2) இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்.
3) ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
4) நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
5) நாட்டின் நலனுக்காக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
6) மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் 80 சதவிகித தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.
7) ஆயுஷ்மான் பார்த் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
8) பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 125-வது பிறந்தநாள் விழா தேசிய அளவில் கொண்டாடப்படும்.
9) நாட்டின் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புல்லட் ரயில் கொண்டு வரப்படும்.
10) நாடு முழுவதும் 6ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?