ஒடுக்குமுறையை வெறிகொண்டுத் தாக்கும் ராப்பர்… குறி வைக்கும் வலதுசாரிகள்: யார் இந்த வேடன்?

Published On:

| By christopher

complaint against rapper Vedan

நடிகர் ரஜினிகாந்த் தனது நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் ‘குறி வைச்சா இரை விழனும்’ என்று ஒரு வசனம் பேசுவார். உண்மையில் அண்டை மாநிலமான கேரளாவில் வலதுசாரிகளும், சங் பரிவார் அமைப்புகளும் தற்போது வேடனை குறிவைத்துள்ளது தான் கடந்த சில நாட்களாக பெரும் விவாதமாக மாறியுள்ளது. complaint against rapper Vedan

அம்பேத்கரிய ராப் பாடகராக தன்னை அறிவித்துக் கொண்ட வேடன் தான் தற்போதைய கேரளாவின் ஹாட் டாபிக். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தனது புரட்சிகர ராப் பாடல்கள் மூலம் குரல் கொடுத்து வரும் ராப் சிங்கர் வேடனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. complaint against rapper Vedan

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை தனது பாடல்களில் ‘இழிவுபடுத்தியதாக’ கூறி ராப்பர் வேடன் மீது NIA விசாரணை கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் கேரள பாலக்காடு நகராட்சியின் பாஜக கவுன்சிலர் V.S. மினிமோல்.

அதில் அவர், மலையாள ராப்பர் வேடனின் ஒரு பாடல் வரிகள் இந்துக்கள் மத்தியில் சாதி வெறுப்பைத் தூண்டுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறான கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. குறிப்பாக ‘தேசம் வாள் ஏந்தியவரின் கைகளில் உள்ளது’ மற்றும் ‘போலி-தேசியவாதி’ என்று அவரது பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இது பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை கெடுப்பது மட்டுமின்றி, நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அலுவலகத்தின் கண்ணியத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமென கூறியுள்ளார்.

மினிமோல் குறிப்பிடும் அந்த பாடலை கடந்த 2019ஆம் ஆண்டு வேடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.complaint against rapper Vedan

ADVERTISEMENT
complaint against rapper Vedan

complaint against rapper Vedan

மினிமோலின் குற்றச்சாட்டுக்கு சங்பரிவார் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்து ஐக்கியவேதித் தலைவர் கே.பி.சசிகலா இதுகுறித்து கடந்த மே 21ஆம் தேதி பாலக்காட்டில் பேசினார். complaint against rapper Vedan

அப்போது அவர், ”மேல் சட்டை ஏதுமின்றி பாடும் ராப்பர் வேடனால் சமூகத்தில் கலச்சார சீரழிவு எழும், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் இது. மேலும் ராப் இசை எஸ்சி/எஸ்டி சமூகத்துடன் எந்த வித தொடர்பும் இல்லாதது. ஆனால் அதன் மூலம் வேடன் மக்களிடையே பிரிவினை விதைக்கிறார்” என குற்றஞ்சாட்டியிருந்தார். complaint against rapper Vedan

எனினும் ராப்பர் வேடனுக்கு ஆதரவாக ஆளும் இடதுசாரி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றனர். complaint against rapper Vedan

complaint against rapper Vedan

இந்து ஐக்கியவேதித் தலைவர் கே.பி.சசிகலா (வலது)

”வேடன் மீதான NIA விசாரணைக் கோரும் பாஜக தலைவரின் புகாரானது, சமூக ரீதியாக வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோதமான சாதி அமைப்பில் ஆழமாக வேரூன்றிய, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சகிப்புத்தன்மையின்மையையும், வேடன் மீதான அதீத வெறுப்பையும் காட்டுகிறது” என CPI (M) தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக் கோரும் அளவுக்கு வலதுசாரிகளால் குறிவைக்கப்படும் இந்த ராப்பர் வேடன் யார்? அவரின் பின்னணி என்ன? நாளுக்கு நாள் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏன்?

complaint against rapper Vedan

யார் இந்த வேடன்? complaint against rapper Vedan

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான வேடனின் தாயார், பிழைப்பிற்காக தமிழ்நாட்டின் ஊட்டியில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து வேலைத் தேடி கேரளாவின் திருச்சூருக்கு சென்றவர், அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முரளி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக 1994ஆம் ஆண்டு பிறந்தவர் தான் வேடன். அவரது இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி. சிறுவயதில் மீன் பிடிப்பதில் கைத்தேர்ந்தவராக இருந்ததால், அவரது நண்பர்கள் அவரை ’வேடன்’ என்று செல்லமாக அழைத்தனர். complaint against rapper Vedan

சிறுவயதிலேயே ராப் இசையால் ஈர்க்கப்பட்ட ஹிரந்தாஸ், முதன்முறையாக வேடன் என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டில் “வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்” என்ற தனது முதல் இசை வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலம் ஆனார். அப்போது அவருக்கு வயது 25.

சாதி பாகுபாடு, நிறவெறி மற்றும் பிற சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின சமூகங்களின் போராட்டங்களை நேரடியாக அந்த பாடல்களில் பாடியிருந்தார் வேடன். மேலும் தவறான தேசபக்தி மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களின் பாசாங்குத்தனம், ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் மீதான அத்துமீறல் போன்ற பிரச்சினைகளையும் அந்த பாடல் பேசியது.

வேடனின் முதல் ஆல்பமே கேரளாவில் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அதே ஆண்டில், அவர் தனது இரண்டாவது இசை வீடியோவான “பூமி என்ஜன் வாழுனிதம்” ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து அவரது பாடல்களில் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகர வரிகள் இடம்பெற, அது இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரும் அடையாளம் கொடுத்தது.

2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக மலையாள திரைப்பட உலகில் கால் பதித்தார். “நாயட்டு”வில் “நரபலி” பாடலை எழுதி, பாடி கவனம் ஈர்ந்தார்.

அதேஆண்டு வெளியான அவரது “வா” என்ற இசை வீடியோ, ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுரண்டப்படும் உழைப்பு, சமூக வேறுபாடு மற்றும் அன்றாட போராட்டங்களை எதிரொலித்தது. complaint against rapper Vedan

அவரது ராப் பாடல்கள் பெரும்பாலும் நாட்டுப்புற பேச்சு வழக்கிலும், தமிழ் வடிவிலும் இருந்தது அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைக்கச் செய்தது.

complaint against rapper Vedan

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் வசூலை வாரிக்குவித்த மஞ்சுமல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து பணியாற்றினார். அப்படத்தில் ஓப்பனிங் பாடலாக இடம்பெற்ற “குத்தந்திரம்” கேரளா, தமிழ்நாடு தாண்டி தென்னிந்திய இசைத் துறையில் ’அவர் யார்’ என்று கேட்க வைத்தது. complaint against rapper Vedan

அவரது ‘வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை’, ‘இந்த வலையில் சிக்கியது மீனா? அல்லது கடலின் வலையில் சிக்கியது நானா?’ போன்ற பாடல் வரிகள் வேடன் மீது பார்வையை இன்னும் தீவிரப்படுத்தின. complaint against rapper Vedan

தொடர்ந்து ’கொண்டல்’ திரைப்படத்தில் மீனவர்களின் வலியையும், ’ஆல் வி இமைஜின் அஸ் லைட்’ திரைப்படத்தில் காதலை சமூகச் சூழலால் சொல்லத் தயங்கும் இரு பெண்களின் வலியையும், சமீபத்தில் வெளியான நரிவேட்டை படத்தில் காடழிப்பால் தங்கள் வீடுகளை இழந்து துரத்தப்படும் வனவாசிகளின் வலியையும் பாடியிருந்தார்.

இப்படி திரைத்துறையில் வேடனின் ராப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இவர் நடத்தும் இசைக் கச்சேரிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் எழுந்து வரும் ஆதரவு குறித்து சொல்லவே வேண்டாம்.

உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரி நடத்தி வரும் அவருக்கு பிரபல இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோருக்கு கூடும் கூட்டத்தை விடவும் அதிக ஆதரவு குவிந்து வருகிறது.

இன்று 30 வயதாகும் வேடன் கேரளாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த நிலையில் தான் சமீபத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான அரசாங்கம் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதன் நான்காவது ஆண்டு விழாக்களில் அவரை மேடையேற்றி அவரது புரட்சி குரலை ஒலிக்க முடிவு செய்தது.

complaint against rapper Vedan

வலதுசாரிகள் கோபம் ஏன்?

அந்த விழாவிற்காக இடுக்கி வந்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கேரள காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயன்படுத்தியதாக வேடனை கைது செய்தது. மேலும், அங்கிருந்து 6 கிராம் கஞ்சாவையும் மீட்டதாக தெரிவித்தனர்.

இதை பயன்படுத்தி வலதுசாரி ஆதரவாளர்கள், அவரின் பாடல் வரியான ’வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை’ என்பதை ’கஞ்சாவில் தைக்கப்பட்ட சட்டை’ என்று எழுதி சமூக ஊடங்கங்களில் அவரை விமர்சித்தனர்.

எனினும் சந்தேகிக்கப்படும் கஞ்சா அளவு குறைவாக இருந்ததால் அவர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் மாநில அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடுக்கியில் திட்டமிடப்பட்டிருந்த வேடனின் இசைக்கச்சேரியும் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு மறுநாள் ஏப்ரல் 29ஆம் தேதி கழுத்தில் சிறுத்தைப் பல் பொறுத்த செயினை அணிந்திருந்ததாக கேரள வனத்துறை வேடன் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. எனினும் அது பரிசாக நண்பர் கொடுத்தது, உண்மையான பல் என்று தனக்குத் தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டு அவர் ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்குகளும், வலதுசாரிகளின் அதீத விமர்சனங்களும் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் இன்னும் கூடுதலான ஆதரவையே பெற்றுள்ளன.

மேலும் வேடனின் சாதிவெறி, நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிரான அடங்காத குரலும், ஆளும் இடதுசாரி கட்சியின் ஆதரவும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு கோபத்தை எழுப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சங்க பரிவார் ஆட்களுக்குப் புரியவில்லை!

இதுதொடர்பாக கேரளா சிபிஐ (எம்) மாநில செயலாளர் எம் வி கோவிந்தன் கூறுகையில், “வேடன் கேரள இசை வரலாற்றில் ஒரு புதிய அலையை உருவாக்கி வருகிறார். அவரது தனித்த தலித் அரசியல் சிந்தனைக் கொண்ட பாடல்கள் சக்தி வாய்ந்தது. அது ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களின் குரலாக சமூகத்தில் எதிரொலிக்கிறது.

இது சங்க பரிவார் ஆட்களுக்குப் புரியவில்லை. கலை என்பது இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர்கள் இன்னும் நம்புகிறார்கள். நிச்சயமாக, நாங்கள் அவரது போதைப்பொருள் பயன்பாட்டை ஆதரிக்கவில்லை, அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார், ஆனால் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் குரலுக்காய், குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் இசைக் கலைஞனுக்காய் நாங்கள் நிச்சயமாக அவருடன் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். complaint against rapper Vedan

complaint against rapper Vedan

அதே வேளையில் சமூக ஆர்வலர்கள், வேடனின் ராப் இசை குறித்தும், அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தெளிவாக கூறுகின்றனர்.

அவர்கள் கூற்றுபடி, “வேடனுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் கேரளாவின் இடதுசாரிகள் – குறிப்பாக சிபிஐ (எம்) அவர் பின்னால் இருக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் திருப்ப பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெளிவாகிறது” என்கின்றனர்.

மேலும் “ஆளும் அரசின் இந்த ஆதரவு தான் வேடனுக்கு எதிராக சங் பரிவார் அமைப்புகள் திரள காரணமாகிறது. தங்களுக்கு எதிராக பாடி வளர்ந்து வரும் இந்த தலித் ராப்பரை வாயடைக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வேடனுக்கு ஆதரவாக திரண்டு வரும் இளைஞர்களை, அவருக்கு எதிராக திருப்ப வேலைப்பார்த்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் வேடன் மீது NIA விசாரணை கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புகார் மனு அனுப்பியது” என்கின்றனர்.

இவை அனைத்திற்கு மத்தியிலும் வேடனின் குரல் இன்னும் அதிகமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது என்பதே உண்மை. அவரது இசைக்கச்சேரிகளுக்கு அரசியல் கூட்டத்தையும் தாண்டிய ஆதரவு வருகிறது.

இது அவரை ராப் பாடகர் என்று மட்டும் சுருக்கி விடாமல், ஒடுக்குமுறைக்கு எதிராக இசையால் குரல் எழுப்பும் நவீன யுகத்தின் தூதராகவே மக்கள் பார்க்க வழிவகுக்கிறது.

சாதிய பாகுபாட்டின் கோர முகம் கண்ட கேரளாவில், அதன் ஆபத்தையும், வலியையும் அடுத்த தலைமுறைக்கு உணர்ச்சிபிழம்பாக அவரது குரல், அதுவும் ஒரு தலித் கலைஞராய் மனதின் அடி ஆழத்தில் இருந்து எழும் வேடனின் கணீர் குரல் இளைஞர்களிடம் வேதமாக எதிரொலிக்கிறது என்பதே உண்மை என சொல்ல தோன்றுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share