இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை: அண்ணாமலை சூசகம்!

Published On:

| By Kalai

BJP in the by election contest

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப் போவதில்லை என்பது அண்ணாமலையின் பேட்டி மூலம் தெரிய வந்திருக்கிறது.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணிக்கு ஒரு மரபிருக்கிறது, ஒரு தர்மம் இருக்கிறது. இடைத்தேர்தல் என்பது ஒரு கட்சியின் பலப்பரீட்சை, அதன் வளர்ச்சி.

கூட்டணி தர்மத்தோடு நடந்து கொள்ளும்போதுதான் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு மரியாதை இருக்கும்.

ADVERTISEMENT

திமுக, காங்கிரசை எதிர்த்து நிற்கக்கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்கவேண்டும். மக்கள் ஆதரவு பெற்றிருக்கவேண்டும்.

வேட்பாளர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும். இடைத்தேர்தலில் பணத்தை ஆளுங்கட்சி தண்ணியாக செலவு செய்வார்கள்.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்த வரை 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் குழுவைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு பணம் விளையாடும் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.

அப்படி இருக்கும்போது ஒரு வேட்பாளருக்கு முழு பலத்தை தரவேண்டும். எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க தான்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர் இருக்கிறார்கள். அதேநேரத்தில் ஓபிஎஸ்சும் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை நிற்கக்கூடிய வேட்பாளர், பணபலம், படைபலம் எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடியவராக இருக்கவேண்டும்.

அதுதான் எங்களின் நிலைப்பாடு. பாஜக தொண்டர்கள் நாங்கள் நிற்கவேண்டும் என்று சொன்னால் கூட எங்களுடைய பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்.

அப்படி நிற்கும்போது வாக்குகள் சிதறும். எனவே அங்கு போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு எல்லாவிதமான ஆதரவையும் தரவேண்டியது எங்களுடைய கடமை என்று கூறியுள்ளார்.

கலை.ரா

ஸ்டாலின் விருப்பம் தேர்தலில் போட்டி: இளங்கோவன் பேட்டி!

வெற்றிக்கு அடிப்படை சின்னம்தான்: ஜி.கே.வாசன் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share