பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது- சிறையில் அடைப்பு- என்ன காரணம்?

Published On:

| By Mathi

Vellore IB BJP

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகவும் இது தொடர்பான ஆவணங்களை தர வேண்டும் என்றும் கூறி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் நுழைய வேலூர் இப்ராஹிம் முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேலூர் இப்ராஹிமை தடுத்த போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் இப்ராஹிமை கடலூர் சிறையில் போலீசார் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share