ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராம் இன்று(மே26) கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் ஜென்னத் கடந்த 24ஆம் தேதி அன்று இரவு பணியில் இருந்துள்ளார்.
அப்போது சிகிச்சைக்காக ஒருவரை அழைத்து வந்த திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் , ”அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவர்க்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா” என்று மிரட்டும் தொனியில் பேசி அதை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அப்போது , ”அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல” என கூறி புவனேஸ்வர் ராம் வீடியோ பதிவு செய்வதை மருத்துவர் ஜென்னத்தும் தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று(மே26) கைது செய்யப்பட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோடியின் 9 ஆண்டுகள் ராகுலின் 9 கேள்விகள்!
“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்