பலூசிஸ்தான் ரயில் கடத்தல்: வாய் திறக்காத பாக். தலைவர்கள்… விமர்சிக்கும் பாஜக

Published On:

| By christopher

bjp Criticize pakistan train hijack

பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலை பலூச் கிளர்ச்சிப் படை கடத்தியுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் உட்பட யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. bjp Criticize pakistan train hijack

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் இன்று (மார்ச் 11) சென்று கொண்டிருந்தது.

அந்த ரயில் போலான் மாவட்டம் அருகே பெஹ்ரோ குன்ரி மற்றும் கடலார் இடையேயான சுரங்கப்பாதையில் வந்தபோது, ‘ரயிலை நிறுத்து… இல்லையென்றால் தண்டவாளங்களை வெடிக்கச் செய்வோம்’ என ரயில்வே அதிகாரிகளுக்கு ஆயுதமேந்திய ஒரு குழு மிரட்டல் விடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயிலில் ஏறிய அக்குழு ரயிலைக் கடத்தி, அதில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து பலூசிஸ்தானின் விடுதலையைக் கோரி வரும் பலூச் விடுதலைப் படை (BLA) என்ற கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளது.

மேலும் “எந்தவொரு ராணுவ ஊடுருவலுக்கும் சமமான பலமான பதிலடி கொடுக்கப்படும். இதுவரை ஆறு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பிணை கைதிகளாக உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ படைகள் நடவடிக்கை எடுத்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ரயிலின் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில், சிபி மருத்துவமனையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதாக பலூசிஸ்தான் மாகாண அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எனினும் ரயில் கடத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

அதே வேளையில், பணயக் கைதிகளுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் தலைவர்கள் எதிர்வினை ஆற்றாதது குறித்து பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்!

உத்தரபிரதேச பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரிஜ் லால் வெளியிட்ட அறிக்கையில், “பிடிபட்ட 470 பயணிகளும் விடுதலை பெற வேண்டும், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் அதன் செயல்களுக்கு தண்டனை அனுபவிக்கிறது. அவர்கள் எங்கள் விமானத்தை கடத்தி, கந்தகருக்கு கொண்டு சென்று, பயங்கரவாதிகளை விடுவிக்க செய்தனர். அவர்கள் நாடாளுமன்றத்தைத் தாக்கினர். ஆனால் 13 வீரர்கள் அந்த பயங்கரவாதிகளைக் கொன்றனர். அவர்கள் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நடத்தினர்” என்று பிரிஜ் லால் கூறினார்.

மக்களை கவனிக்கவில்லை! bjp Criticize pakistan train hijack

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாஜக எம்.பி. குலாம் அலி கட்டானா, “இதுவரை பாகிஸ்தான் என்ன செய்துள்ளது? இந்தியாவுடன் சேர்ந்து சுதந்திரம் பெற்றது, ஆனால் உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை. அவர்கள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். சில நேரங்களில் பஞ்சாபில், சில நேரங்களில் காஷ்மீரில், சில நேரங்களில் ஆப்கானிஸ்தானில். அவர்கள் தங்கள் மக்களை கவனிக்கவில்லை. பலூச் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு நாள் அவர்களின் பிடியிலிருந்து விடுபடும்” என்று குலாம் அலி கட்டானா விமர்சித்துள்ளார்.

உடையும் விளிம்பில் பாகிஸ்தான் bjp Criticize pakistan train hijack

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் டிஜிபி எஸ்பி வைத் கூறுகையில், “பாகிஸ்தானின் இராணுவமும் அரசாங்கமும் பலூசிஸ்தான் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. பலூசிஸ்தானின் 6-7 மாவட்டங்கள் முற்றிலும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கோ அல்லது பாகிஸ்தான் இராணுவத்திற்கோ அங்கு எந்த கட்டுப்பாடும் இல்லை… இதுபோன்ற சூழ்நிலையில், இதெல்லாம் நடப்பதில் ஆச்சரியமில்லை… பாகிஸ்தான் உடையும் விளிம்பில் உள்ளது” என்று வைத் தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share