மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தைத் தடை செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மனுத்தாக்கல் செய்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். bjp-cadre-vijeesh suspended after plea against empuraan
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற கோத்ரா கலவரத்தைக் குறிக்கும் காட்சிகள் தொடர்பாக கேரளா பாஜக, இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக எம்புரான் திரைப்படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள பாஜக தலைவரான திருச்சூரை சேர்ந்த வி.வி. விஜீஷ் இன்று (ஏப்ரல் 1) தாக்கல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “எம்புரான் படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் முக்கிய வில்லனுக்கும் பஜ்ரங் தளத் தலைவருக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து சர்ச்சையாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இது சாத்தியமான வகுப்புவாத கலவரத்திற்கு வித்திடும். எனவே இப்படத்தை திரையிட உடனடியாக தடைவிதிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.எஸ்.டயஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தனது வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து, ”மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ஏற்கனவே படத்தை காட்சிப்படுத்த அனுமதித்துள்ளது. இன்றுவரை, மாநில காவல்துறையால் எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை” என மாநில வழக்கறிஞர் செபின் தாமஸ் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
நீதிபதி காட்டம்! bjp-cadre-vijeesh suspended after plea against empuraan
அதனையடுத்து மனுதாரரை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.
அவர், ”எம்புரான் திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? உங்கள் ஆட்சேபனை என்ன? இது தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்டது தானே?
உங்கள் குற்றச்சாட்டின் மீது சந்தேகம் உள்ளது. இந்தப் படத்தில் வன்முறையைத் தூண்டுவது தொடர்பாக ஒரு புகாரைக் காட்ட முடியுமா? காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட FIR ஐ எனக்குக் காட்ட முடியுமா? இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வேறு எதுவும் இல்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், “கேரள உயர் நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தார்.
கட்சியிலிருந்து சஸ்பெண்ட்! bjp-cadre-vijeesh suspended after plea against empuraan
இந்த நிலையில் எம்புரான் திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பாஜக நிர்வாகி விஜிஷை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து கேரளா பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதில், “கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக பாஜக மாநிலத் தலைவரின் ஒப்புதலுடன் விஜிஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 200 கோடி வசூல்!
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிஃபர். இதே கூட்டணி இணைந்து உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், படம் வெளியான 5 நாட்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கிடையே படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று நடிகர் மோகன்லால் உறுதியளித்தார். அதன்படி இன்று முதல் படத்தில் இருந்து 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.