கேரள மாநிலத்தில் காட்டு பன்றியை சுடும் குழுவில் இருந்த ஒருவர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.BJP activist shot dead in Kannur
கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்( வயது 51). பாரதிய ஜனதா கட்சி பிரமுரான இவருக்கும் காண்டிரக்டர் சந்தோஷ் என்பவருக்கும் வீடு கட்டுவதில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. சந்தோஷ் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லும் பஞ்சாயத்துக் குழுவில் இடம் பெற்றுள்ளார். இதனால், அவரிடத்தில் துப்பாக்கி இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சந்தோஷ் துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.

பின்னர், அவரை நேருக்கு நேராக சுட்டுக் கொன்றுள்ளார். இதை பார்த்த ராதாகிருஷ்ணனின் மகன் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளார். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது, அவர் குடி போதையில் இருந்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் வீடு கட்ட எடுத்த காண்டிராக்ட் தொடர்பாக ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
முன்னதாக , சந்தோஷ் நேற்று மாலை 4. 23 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று டார்கெட் முடிக்கப்படும் என்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மாலை 7 மணியளவில், ‘நான் உன்னிடம் ஏற்கனவே எச்சரித்துள்ளேன். என்னவளை துன்புறுத்தாதே என்று. நீ கேட்கவில்லை. என் வாழ்க்கை போனால் கூட தாங்கிக் கொள்வேன். என்னவளை இழக்க முடியாது. இதற்காக, உன்னை மன்னிக்கவே மாட்டேன்’ என்று பதிவுகளை வெளியிட்டுள்ளார். BJP activist shot dead in Kannur
இதற்கிடையே, விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளி வந்துள்ளது. ராதாகிருஷ்ணனின் மனைவியும் கொலை செய்த சந்தோசும் கிளாஸ்மேட்டாம். ராதாகிருஷ்ணன் மனைவிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இதற்கு, ராதாகிருஷ்ணன் தடையாக இருந்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.