பறவை மோதியதால் விமானத்தில் தீ விபத்து!

Published On:

| By admin

பாட்னாவிலிருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பீகார் தலைநகர் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பாட்னாவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு பறவை மீது மோதியதால் இடது இயந்திரத்தில் தீ பிடித்தது. பின்னர் பாட்னா விமான நிலையத்தில் இந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 185 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தின் மீது பறவை மோதியது இயந்திரத்தில் தீப்பொறி பறந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இந்த விமானத்தில் இருந்த உள்ளூர்வாசி பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. சரியான நேரத்தில் விமானி சுதாரித்துக்கொண்டு எஞ்சின்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விமானத்தில் தீப்பிடித்த உடனேயே மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாட்னா விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்த பாட்னா விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை ஒன்று மோதியதால் இடது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறுபடியும் பாட்னா விமான நிலையத்திலேயே விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.” என்று தெரிவித்தனர். வீடும் தக்க நேரத்தில் சுதாரித்துக்கொண்டு செயல்பட்டதற்கு விமானிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share