இந்தியாவின் ஒட்டு மொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு 100 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக Knight Frank’s Wealth Report 2025 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உலகில் அதிக பணக்காரர்கள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 90 கோடி மதிப்புக்கு சொத்து வைத்திருப்பவர்கள் பணக்காரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். billionaires assets 100 lakh crore
அந்தவகையில், அமெரிக்காவில் 9 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 700 லட்சம் கோடியாகும். உலகிலுள்ள பணக்காரர்களில் 40 சதவிகிதம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இங்கு 4.7 லட்சம் பேர் 90 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளனர். இவர்களின் மொத்த மதிப்பு 1.34 லட்சம் கோடியாகும்.
இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 85,698 பேர் 90 கோடிக்கு சொத்து வைத்திருக்கின்றனர். இந்தியாவில் இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 100 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த 3 வருடங்களில் இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரம் பேராக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு 6 பில்லியனர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், இப்போது 191 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 26 பில்லியனர்கள் புதியதாக பட்டியலில் சேர்ந்துள்ளனர். billionaires assets 100 lakh crore
உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் மூன்றாவது நாடாக ஜப்பான் உள்ளது. இங்கு, 1.22 லட்சம் பேர் 90 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளனர். பட்டியலில் ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா,ஹாங்காங் போன்ற நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
